Pages

Sunday, June 5, 2011

தீர்த்தக் கரையினிலே....





தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி


மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வாணி விடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ

கடுமை யுடையதடி எந்த நேரமும் காவலும் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் என்னும்போது தன் அங்கு வருவதற்க்கில்லை
கொடுமை பொறுக்கவில்லை கட்டும் காவலும் குடிக் கிடக்குடங்கே
நடுமை அரசியவள் எதற்காகவோ நாணிக் குலைத்திடுவாள் 

கூடிப் பிரியாமலே ஓர் இரவெல்லாம்  கொஞ்சிக் குலவி  அங்கே
அடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை திரண்டு தன் நல்ல களி எய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லயோயடி 



tirthak-karaiyinile terkku mulaiyil shenbagat-tottattile 
parttirundal varuven vennilavile pangiyodenru shonnai 
varttai tavari vittai adi kannamma marbu tudikkudadi 
partta vidattilellam unnaip-polave parvai teriyudadi 

meni kodikkudadi talai shutriye vedanai sheigudadi 
vani vidattaiyellam inda vennila vandu tazhuvudu par 
monattirukkudadi inda vaiyagham muzhgit-tuyilinile 
nanoruvan mattilum pirivebador narakat-tuzhaluvado 

kadumai-yudaiyadadi enda neramum kavalum maligaiyil 
adimai pughunda pinnum ennumpodu tan angu varuvadarkkillai 
kodumai porukkavillai kattum kavalum kudik-kidakkudange 
nadumai arashiyaval edarkkaghavo nanik-kulaittiduval 

koodip-piriyamale or-iravellam konjik-kulavi ange 
adi vilaiyadiye unran meniyai ayiram kodhi murai 
nadit-tazhuvi manakkurai tirndu tan nalla kali eidiye 
paadip-paravashamai nirkkave tavam panniyadillaoyadi

6 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...